கருத்துச்சுதந்திரம்

கனவுகள்/கற்பனைகள் என்பவை சிந்தனை சுதந்திரத்தின் பகுதிகள். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இவை ஏதோ ஒரு விதத்தில் இருக்கும். அதே வேளை அவற்றுக்கான நடைமுறை சாத்தியக்கூறுகள் தொடர்பான புரிதலும் அவர்களுக்குள் இருக்கும்.

ஒருவரிடம் திருமணம் குறித்த உங்களுடைய ஆசை என்ன என்று கேட்கையில் அவர் சொல்கின்ற கற்பனாரீதியான பதில்கள் விமர்சிக்கப்பட வேண்டிய தேவை என்ன இருக்கின்றது?

அதே ஒருவர் "என் பெற்றோர் கடன் வாங்கியாவது எனக்கு வரதட்சணை தரவேண்டும், முடியாது என்பதையெல்லாம் ஏற்க முடியாது" என்று சொன்னால் அது கடுமையான கண்டனத்துக்கு உரியதே. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.(இதற்குப் பின்னால் இடியாப்பச்சிக்கலாய் ஒரு சமுதாயப்பின்னணி இருந்தபோதிலும் இந்த கருத்து தவறு தான்.)

ஆனால்,
ஆனால,

ஒருவர் "என் பெற்றோர் கடன் வாங்கி கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்தாலும் நான் arrear வைத்தே தீருவேன், என் பெற்றோர் படும் கஷ்டத்தை விட arrear என்கின்ற கௌரவம் எனக்கு முக்கியம்" என்று ஒருவர் சொல்கையில் அது என் உங்கள் கண்களையும் கருத்தையும் உறுத்தவில்லை? எந்த விதமான நியாயமான காரணமும் இல்லாத இந்த திமிர் பேச்சு தான் மிக மிகக்கடுமையாக விமர்சிக்கப்பட்ட வேண்டியது.

ஆக ஒரு பெண் பொது வெளியில் தன் கருத்தை, அது விளையாட்டுப் பேச்சோ, விதண்டாவாதப்பேச்சோ,வினாப்பேச்சோ எதைச்சொன்னாலும் அந்த கருத்தோடு சேர்த்து தொடர்பே இல்லாமல் அவளுடைய தோற்றத்தையும் சேர்த்து விமர்சிப்பதில் என்ன ஒரு குரூர திருப்தி???

உங்களுடைய வக்கிர மனதை, வன்மத்தை, காழ்ப்பை வாந்தியெடுக்கிறீர்கள்.உங்கள் வயிறு, மன்னிக்கவும் மனது சுத்தம் செய்யப்படவேண்டும்.

ஒரு பெண்ணின் கனவுகாணும் உரிமையை,கேள்வி கேட்கும் உரிமையை கேலி செய்வதன் மூலம் எதிர்காலத்தில் அநியாயத்தை எதிர்த்துப்போராடும் அவளின் மனோ தைரியத்தை அநீதியான முறையில் பறிக்கின்றீர்கள்.

ஒரு நிமிடம்,
ஒரு நிமிடம்,

இங்கே "பெண்" என்று நான் சொல்வது யாரோ ஒருத்தி தானே என அசட்டையாக என்ன வேண்டாம். அவள் ஒரு வேளை இன்று உங்கள் மடியில் செல்லம் கொஞ்சி சந்தோஷமாய் விளையாடிக்கொண்டிருக்கும் உங்கள் வீட்டு குட்டி தேவதையாய்க்கூட இருக்கலாம். கவனம் !!!

பி.கு. - இந்த பதிவு மிக மிக கேவலமாகவோ கீழ்த்தரமாகவோ ஆபாசமாகவோ பெண்களை சித்தரிக்கும் meme creator களுக்கும் அதை பகிர்பவர்களுக்குமானது.


April 2, 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக