ஒரு மீனவனை சுடப்போகும் தோட்டாவோ
ஒரு பிஞ்சின் காலிலிருக்கும் கொலுசோ
ஒரு குழந்தையை விழுங்கப்போகும் தீயோ
ஒரு சிறுமியை சிதைக்கப்போகும் மிருகத்தின் முகப்பு வாலோ
ஒரு வரலாற்று வாழ்வியல் தொன்மையை புதைக்கப்போகும் மணல் மூட்டைகளோ
ஒரு வர்த்தக உயிர்கொல்லி இரசாயனமோ
ஒரு வேளாண் சாமியை இறுக்கப்போகும் காலன் கயிறோ
எந்த நேரம் வெளிவந்துவிடப்போகிறதோ என்று தான் பயமாக இருக்கிறதே ஒழிய
வாழத்தகுதியற்ற வானரங்கள்
விலை போனாலென்ன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக