கண்ணானவன்


என் இறைவா!!!

ஏழ் பிறப்பிலும் எப்போதும் பிரியாமை வேண்டும்!!!
உன்னை என்றும் மறவாமை வேண்டும்!!!

மீண்டும் பிறப்புண்டேல்,,

சைவமும் தமிழும் நிறை சோழ வள நாட்டில்,, 
வயலும் வனப்புமான காவேரி நதி தீரத்தில்,,,
பாரம்பரியமும் பண்பாடும் மிக்க வேளாளர் குடியில்,, 
வெவ்வேறு கோத்திரங்களில் நாம்,, 
மீண்டும் பிறக்கும் பெருமை வேண்டும்!!! 

நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் வளர்ந்து,, 
உனக்காய் காத்திருக்கும் அருமை வேண்டும்!!! 
அக்கினி அருந்ததி முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாய்,, 
அன்னை தந்தை ஆசியுடன்,, 
மீண்டும் உன் திருக்கரம் பிடிக்கும் உரிமை வேண்டும்!!! 

கோடைகாலமும் இலையுதிரும்,, 
மழைக்காலமும் இளவேனிலும் மாறினாலும்,, 

தரணியில் சிறந்த தாய்த்திருநாட்டில்,, 
தமிழ் மண்ணில்,, 
அன்றில்களின் அன்பால்,, 
இணைபிரியாது வாழும் இனிமை வேண்டும்!!!! 

என் இறைவா!!! 

ஏழ் பிறப்பிலும் எப்போதும் பிரியாமை வேண்டும்!!! 
உன்னை என்றும் மறவாமை வேண்டும்!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக