தொல்லைகள் துரத்த துரத்த,
துன்பங்கள் துவட்ட துவட்ட,
துடைத்தெறிந்தெழும்
துணிவான பீனிக்ஸாய்,,
நன்மையும் நியாயமுமாய் மனம்,
நாணயமும் நேர்மையுமாய் உறவு,
நா.பா வின் பொன்விலங்கில்
நான் பார்த்த சத்தியமூர்த்தியாய்,,
பணம் என்றால் என்ன
பதவி என்றால் என்ன
பண்பு என்றால் என்ன
பண்பாடு என்றால் என்ன
பாசம் என்றால் என்ன என்று
பாதை காட்டியது முதல்
பதியைத் தெரிந்து
பக்தியுடனும் பாரம்பரியத்துடனும்
பணிந்து வாழச்சொன்னது வரை
பல் பொருள் கற்றுத் தந்த
பெருமதிப்பிற்குரிய
புனிதமான பவழ மல்லிகையாய்,,
எழுத்துணர்த்தி
எண்ணமுருவாக்கி
என்னை எனக்கு காட்டிய
என் அன்பு அண்ணனுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!
பல வருடங்களில்
ஒரு வருடமும் தவறாமல்
இவ்வருடம் தவறவிட்ட
ஆன்மாவை வருடும்
அழகான 'கண்ணே கலைமானே' வுக்காக ஏங்கி படி,,
எங்கோ தென்கிழக்கின்
ஏதோ ஒரு மூலையிலிருந்து
என் பிரார்த்தனை எல்லாம்
ஒன்றுதான்,,,
"நிம்மதி மட்டும் உங்களுடன்
நிரந்தரமாய் இருக்கவேண்டும் எப்போதும்"!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக