மண் ஊடுருவி
வேர் நுழைத்து
விண்வரை
நெடிதுயர்ந்து
இலை விரித்து
கிளை பரப்பிய அதன்
கைகள் வெட்டப்பட்டன
அதன் வெண்ணிற
பின்னணி
புகைமூட்டமாய்
பயமுறுத்தியது.
கரங்கள் நிறைய
கூடுகளைத்தாங்கி
குருவிக்குஞ்சுகளை
அணைத்து வளர்த்து
பூத்து
வண்டுகளுக்கு
விருந்தளித்து
மகரந்தம்
பகிர்ந்து
காய்த்து
கனிந்து
விதை உதிர்த்து
இனம் பெருகி
விழுது ஊன்றி
உணவாகி
மருந்தாகி
உறையுளாகி
தன் பிராணன் பெற்று
என் பிராணன் தந்து
வாழ்ந்து
வாழ்விக்கவேண்டுமெனில்
சீர்திருத்தம் அவசியம்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக