(கொஞ்சம் ஓயட்டும் அப்புறம் பாத்துக்கலாம்னு பாத்தா இன்னமும் ஓடிட்டு இருக்கு. நம்ம சீக்கிரமே attendance அ போட்டு வச்சுருவோம். புத்தீசல் மாதிரி எப்ப புதுசா breaking news வரும்னு யாருக்கும் தெரியாது. இப்போவே பாதிப்பேர் தனுஷோட லேசர் சிகிச்சைய discuss பண்ண போய்ட்டாங்க. கொஞ்சம் பேர் நீயா நானா debate ல இருக்காங்க. மிச்சம் இருக்குற கொஞ்ச சமூகத்துக்கு நம்ம தொண்ட(!) செய்யனும் இல்லயா? அப்புறம் நம்மையும் அரத பழசுனு ஓரம் கட்டிடுவாங்க இளையராஜா மாதிரி.ஆங்ஙங்ங😳😳. தோ வந்துட்டேனே point க்கு)
இரண்டு நாளாக ஒரே களேபரம். இந்தியா பாகிஸ்தான் match மாதிரி. இல்ல இந்தியா இலங்கை match மாதிரி என்று சொல்லலாம். ஏனென்றால் பொதுவிலும் சிலர் இருப்பார்கள் இந்த match களில்.
எனக்கு விவரம் தெரிந்து நான் கேட்ட முதல் இளையராஜா பாடல்(இங்கே கவனிக்க, இளையராஜா என்றுதான் வருகிறது வாயில்) "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" என்று நினைக்கிறேன். (அதான் ஏற்கனவே சொன்னேனே ரொம்ப பிந்தி பிறந்துட்டேன்). அப்போதிலிருந்து எனக்கு இளையராஜாவின் இசை பிடிக்கும்......
(அட எல்லாரும் இப்பிடிதானே ஆரம்பிக்கிறாங்க. நம்ம வேற எதாவது எழுதலாம்)
Copy rights என்றால் ஒருவருக்கு தன் படைப்பு மீதுள்ள உரிமை என்பது மட்டும் தான் எனக்குத்தெரியும். (இதில் இந்த royalty, intellectual property, காப்புரிமை இதெல்லாம் என்னவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். அது பிரச்சினை இல்லை இங்கே)
பொதுவாக புத்தகங்களில் எழுதி இருக்கும் உரிமை ஆசிரியருக்கு என்று. இப்போது யோசிக்கத்தோன்றுகிறது. அப்படியென்றால் பதிப்பாளர் ஓவியர் இவர்களுக்கெல்லாம் பங்கல்லையோ என்று. (சரி நாம் வேறு எழுதிக்கொண்டிருக்கிறோம். எழுத்தாளர்கள் பார்த்தால் கொன்றுவிடுவர்கள். நமக்கேன் புது பஞ்சாயத்து)
இந்த விஷயம் தொடர்பான விமர்சனங்களை அலசலாம். சுவாரஸ்யமாக இருக்கும்.
"இளையராஜா இப்படி கேட்டது தவறு. பாடவேண்டாம் என்று ஒரு பாடகரைச் சொல்வது தார்மீக அடிப்படையில் மகா பாதகம்"
Point 1 :தன்னுடைய உரிமையை சட்டப்படி ஒரு நிறுவனத்திடம் கொடுத்து தனக்கு நியாயமான பங்கை பெற்றுத்தரச்சொன்னார். மேடைக்கச்சேரிகளில் தன் மெட்டு பயன்படும்போது எனக்கும் அதன் லாபத்தின் பலனை தரவேண்டும் என்கிறார்.
பாடவேண்டாமென்று சொல்லவில்லை என்பதை கவனிக்கவேண்டும். தவிரவும் இலவச நிகழ்ச்சிகளைப்பற்றி சொல்லவே இல்லை. பணம் சம்பாதித்தால் பங்கு கொடு அவ்வளவுதான்.
"ஒரு நீண்டகால நண்பர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தவறு"
Point 2 : SPB நண்பர் என்பதால் நட்பு ரீதியாக கேட்டிருக்கலாம் தான். ஆனால் தன் படைப்புக்கான உரிமையை பிச்சை கேட்கமுடியுமா? SPB க்கு ஒரு தார்மீகம் IR ஒரு தார்மீகம் என்றிருக்க முடியாதே? சட்ட நடவடிக்கை என்பது இரு தரப்புக்கும் நியாயமாக இருந்திருக்கும். நண்பருடன் பகிர்ந்து உருவாக்கிய படைப்பின் பலனை நண்பருடன் பகிர்வது தார்மீகம் தானே?
" SPB இன் Facebook பதிவு"
Point 3: இப்போது இந்த பிரச்சினையே அதில் தான். தன் ரசிகர்களுக்கு அறிவிக்க இந்த வழிதான் கிடைத்ததா? Ticket வாங்கியவர்களுக்கு தனிப்பட்டமுறையில் தெரிவித்திருக்கலாம். அந்த ஏற்பாட்டுக்குழு மூலமாக அறிவித்திருக்கலாம். இல்லை சட்ட ரீதியாகவே அணுகி இருக்கலாம். எதற்கு இப்படி ஒரு பரிதாப நாடகம்? தன் மீது தவறில்லை என்று காட்டி IR மீது தனக்கு வந்த வெஞ்சினத்தை வேறு வழியில் தீர்த்துக்கொண்டார்.
"கங்கை அமரன்"
Point 4: இந்த மனிதர் அரசியல் பேசப்போன இடத்தில் வாயை விட்டுவிட்டார். அவ்வளவுதான். நாம் Facebook இல் நம் கருத்தை சொல்கிறோம். அவர் தன் கருத்தை அங்கே சொன்னார் அவ்வளவுதான். என்ன எல்லோரும் கொண்டாடுகின்ற மகானுபாவரை ஒருமையில் பேசிவிட்டாராம். ஐயா நியாயவாதிகளே உங்கள் உடன் பிறந்த மூத்த சகோதரரை நீங்கள் எப்படி கூப்பிடுவீர்கள் என்று யோசித்தீர்களா?ஆனால் கங்கை அமரனிடம் எனக்குள்ள கேள்வி, பாரதியார் பாடல்கள், திருவாசகம், தியாகராஜர் முத்துஸ்வாமி தீட்சிதர் கீர்த்தனைகள் எல்லாம் இன்னுமா நாட்டுடைமை ஆக்கப்படவில்லை?
"பாத்ரூமில் பாட முடியாதா? கல்யாண நிகழ்ச்சிகளில் பாட முடியாதா?cover version செய்யமுடியாதா? Maestro music கேட்கமுடியாதா(இந்த இரண்டும் என் கேள்விகள்) etc etc ஐயகோ"
Point 5: ரசிகர்கள் தங்கள் தேவைக்காக பயன்படுத்துவதையோ, கலைஞர்கள் தம் வயிற்றுப்பிழைப்புக்காக பயன்படுத்துவதையோ இந்த அறிக்கை பாதிக்காது. ஆனால் பெரிய அளவில் வணிக நோக்கங்களுடன் பயன்படுத்தப்பட்டால் பங்கு வேண்டும் என்பதாக IR இன் தரப்பு சட்ட ஆலோசகர் வளக்கமளித்திருக்கிறார்
" மற்ற இசையமைப்பாளர்களோ பாடகர்களோ கேட்கவில்லையே?"
Point 6:பழையவர்களைப்பற்றி தெரியவில்லை. ARR, KJJ எல்லாம் ஏற்கனவே வாங்கித்தான் வைத்திருக்கின்றார்களாம் அதனால்தான் ARR Low Budget திரைப்படங்களுக்கு இசையமைப்பதில்லையாம். இளையராஜா ஏனோ இவ்வளவுநாள் இதை செய்யவில்ல.இன்றைய இசையமைப்பாளர்கள் இதையெல்லாம் கேட்டால் அம்பு அவர்கள் பக்கமே திரும்பிவிடும் அஅபாயம் இருக்கின்றது.
"இசையமைப்பாளர்களைத்தவிர பாடகர்கள் பாடலாசிரியர்கள் வாத்தியக்கலைஞர்கள் என்று எல்லோருக்கும் பங்கு உண்டில்லையா?"
Point 7: இருக்கலாம் அது அந்த சட்டம் என்ன சொல்கிறதோ அப்படித்தானே இருக்க முடியும்?எனக்கு அந்த சட்டம் தெரியாது ஆனால் பாடலாசிரியர் மதன் கார்க்கி அதை வரவேற்றிருக்கன்றார். எனவே ஒரு கலைஞனுக்கு அவன் படைப்பிற்கான நியாயமான விலை கிடைப்பது நல்ல விஷயம் தான். என்ன மேடை நிகழ்ச்சிகள் இசைத்தட்டுக்களின் விலை உயரக்கூடும். ஆனால் ரசிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் பேசக்கூடாது. இலவசமாக கிடைத்த தண்ணீரை விலை கொடுத்து வாங்கவேண்டி வந்தபோது நாம் தண்ணீர் குடிக்கவில்லையா என்ன? இவ்வளவு நாள் கலைத்திருட்டு செய்தோம். இனி நல்லவர்களாக மாறுவோம்.நியாயமாக நடப்போம்
"இசை காற்று மழை போல எல்லோருக்கும் பொதுவானது"
Point 8: உண்மைதான்.ஆனால் அவற்றின் copy right கூட இயற்கையிடம் இருக்கின்றது. அதனால்தான் நாம் கேட்கும்போதெல்லாம் அவை கிடைப்பதில்லை
"இன்றைக்கு இசையமைத்தால் ஒரு படம் கூட ஓடாது"
Point 8: ஓடாது என்ன, சமீபத்திய படங்கள் ஓடவில்லை என்று தான் நினைக்கிறேன். ஆனால் பாருங்கள் உங்களுக்கு என்னே அறிவு. அவருக்கென்று ஒரு Template இல் அவர் இருக்கிறார். கால ஓட்டத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப அவரால் போகமுடியாமல் இருக்கலாமே ஒழிய அவருடைய படைப்புகளின் தன்மை எப்படி மாறும்? நம்ரசனை தான் மாறிவிட்டது. மீண்டும் திரையிடப்பட்ட பாட்ஷா,கர்ணன் எல்லாம் எவ்வளவு நாட்கள் ஓடின?
"இவரின் இந்த திமிரால் தான் இவர் ஒழிந்தார்"
Point 9: திமிரே இல்லாத ARR இன் பாடல்களுக்கிடையே ஒற்றுமைகள் இருப்பதாக நான் உணர்கிறேன். ஜோடி திரைப்படப்பாடலொன்றின் சாயலை lagaan பாடலொன்றில் உணர்கிறேன். VTV படப்பாடலின் சாயலை காற்றுவெளியிடை பாடலொன்றில் நான் காண்கின்றேன். இப்படி ஒன்றை IR இன் பாடலொன்றில் உங்களால் காட்டமுடியாமல் போனால் அவர் ஒரு வித்யா கர்வியாக உங்கள் முன்னால் தலை நிமிர்ந்து நின்றால் இதில் தவறென்ன?
"ARR மிகவும் நல்லவர், பாடகர்களை வாழவைத்தார், இவரானால் இளம் பாடகர்களை ஊக்குவிக்கவில்லை"
Point 10:உண்மைதான். இந்த வாதம் மிகச்சரியே. ARR ஆல் SPB கர்வபங்கமடைந்தார். கலைஞர்கள் ஒருவரை ஒருவர் சாராதிருக்கும் அவரின் இந்த அணுகுமுறைக்காகவே அவரை ஒரு தீர்க்கதரிசியாக நான் கருதுகிறேன். ஆனால் வாத்தியக்கலைஞர்களை புறக்கணித்ததை என்னால் ஏற்கமுடியவில்லை. எனக்கு இந்த கண்ணி இசை ஏனோ செயற்கையாகவே இருக்கின்றது
"திடீர் அறிக்கை SPB யை கலங்கடித்திருக்கும்"
Point 11: என்னதான் அவர் இதை வேறுவிதமாக கையாண்டிருக்கலாம் என்று வாதித்தாலும் அந்த நேரத்தில் அந்த திடீர் அறிக்கை வந்ததும் ஒரு பதற்றம் இருந்திருக்கக்கூடும். எத்தனை ஒத்திகைகள் பார்த்திருக்கக்கூடும்? நான் பாடிய பாடலைப்பாடவேண்டாம் என்று ஒருவர் கூறுவதும் ticket வாங்கிய ரசிகர்கள் எப்படி எதிர்கொள்வார்களோ என்றும் பதறலாம் என்பதும் ஒரு கலைஞனுக்கு கவலை தரும் விஷயங்கள். அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடாத நிலையில் அடுத்த நிகழ்ச்சி நடத்த்வேண்டிய நிர்பந்தத்தில் இலகுவான அறிவிப்புக்கு இந்த வழியை தேர்ந்தெடுத்து இருக்கலாம்.
"மற்ற பாடகர்கள் எந்த அறிவிப்பும் செய்யவில்லை"
Point 12: அந்த நிகழ்ச்சி SPB 50 என்கையில் அவர்தான் அறிவித்திருக்கவேண்டும்
"ஏன் மற்ற நாடுகளில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு notice அனுப்பவில்லை"
Point 13: இந்த ஒரு வேள்வியை மட்டும் என்னால் நியாயப்படுத்த முடியவில்லை. இல்லை இது பற்றிய நியாயம் எனக்கு தெரியவில்லை என்றிருக்கலாம். இங்கே தான் IR பொறாமை பிடித்தவர்தானோ என்ற எண்ணம் மேலோங்குகிறது.
"Combo பாடல்கள் இல்லாமல் இருவராலும் நிகழ்ச்சி நடத்த முடியாது"
Point 14: இது வீண்வாதம். தேவைப்பட்டால் SPB வேறு இசையமைப்பாளர்கள் இசையில் பாடிய பாடல்களைப்பாடுவார். IR வேறு பாடகர்களைப் பயன்படுத்துவார்.(அந்த அளவுக்கு போகாமல் இந்த பிரச்சினை தீர்ந்துவிடும் என்று பிரார்த்திக்கிறேன்)
அவ்வளவுதான் விவாதங்கள் என்று நினைக்கிறேன். எதையுமே விட்டுவிட்டேனோ தெரியவில்லை.(சப்பஆஆஆஆ ஞாபகம் வைத்து எழுதுறதுக்குள்ள நாக்கே தள்ளிடுச்சு.இன்னுமிருக்கே)
இந்த இருவருமே கலை மேதைகள். இருவரிடமும் பொதுத்தன்மை தனித்துவம் இரண்டுமே உண்டு. அதே போல இருவரிடமும் நியாயமே இல்லாமல் கூட இருக்கலாம்.
த்தம் படைப்பு மீது இருவருக்கும் இருக்கும் உரிமை மற்றும் அது தொடர்பான சட்டவிஷயங்கள் தர்ம அதர்மங்கள் நியாய அநியாயங்கள் நம் விவாதங்களுக்கு அப்பாற்பட்டவை. வெளியில் வராத விஷயங்கள் கூட இருக்கலாம். நம் status களால் எந்த எதிர்வினையும் ஏற்படப்போவதில்லை.
எல்லா breaking news க்கும் இன்னுமொரு கோணம் அல்லது பல கோணங்கள் இருக்கும். சில நேரங்களில் உறுதிப்படுத்தப்படாத விஷயங்களை நம் கோணத்தில் யோசித்துப்பார்த்து விவாதித்து சாதாரண விஷயங்களைக்கூட ஊதி பெரிதாக்கிவிடுகிறோம் அல்லது திசை திருப்பிவிடுகிறோம்(அந்த காலத்துல பாட்டி தாத்தா பண்ண அதே வெட்டிப்பேச்சே தாங்க கொஞ்சம் பெரிய திண்ணை. அவ்வளவுதான். ஆங் நானும் உள்ளேன் ஐயா)
ஏதோ சுவாரஸ்யமாக இருந்தால் status போடுகிறோம். கடந்து போய்விடுகிறோம். (இதில் இந்த பணம் பெற்று பக்கம்பக்கமாய் எழுதுகிற sleeper cell களோ, meme creator களோ, சமூக அக்கறையுள்ள சீர்திருத்தவாதிகளோ சேர்த்தியில்லை).
பலரை follow செய்வதால் ஏற்பட்ட அறிவோடு(😳😜🤔) என் சொந்த சிந்தனையும் சேர்த்துத்தான் மேலே உள்ள நியாயப்படுத்தல்கள் பிறந்தன
ஆனால் இரண்டு நாட்களாய் நான் பார்த்த படு மோசமான உரிமைத்திருட்டு தான் இந்தப்பதிவை எழுத தூண்டியது.
இங்கே காப்புரிமை பற்றி class எடுத்துக்கொண்டிருந்த நியாயவாதிகளின் பதிவுகள் சிலவற்றில் வேறொறு பதிவிலிருந்து எடுக்கப்பட்ட வசனங்களையோ சொற்றொடர்களையோ பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது.
எது மூலம் என்றே தெரியவில்லை. இல்லை ஒருவரே fake id இல் எழுதுகிறார்களோ என்று கூடத்தோன்றியது.
பொதுவெளியில் எழுதப்படுபவை பொதுச்சொத்து தான். ரசிக்கலாம் விவாதிக்கலாம் பகிரலாம். அதில் தவறேயில்லை. சிலருக்கு சிந்திக்கமுடியும் ஆனால் எழுதவராது. அவர்கள் தம் சிந்தனையோடு ஒத்துப்போகும் பதிவை பகிர்ந்துவிட்டுப்போவார்கள். பகிரும்போது எழுதியவரின் பெயரோடே பகிரப்படுவதால் தவறில்லை.
ஆனால் ஒருவருடைய பதிவிலிருந்து ஒரு பகுதியை எடுத்து தன் பதிவில் செருகுவது தவறில்லையோ 🤔🤔🤔(தப்புனு தான் நெனச்சேன். ஒருவேளை social media rights, Facebook rights னுலாம் இருக்கோ என்னமோ. அதனால no comments)
பாத்து மக்களே,
பில்கேட்ஸ் software license agreement க்காக போராடினாராம். நல்லது நடந்தது.
இளையராஜாவே இந்த copy right பத்தி இப்பத்தான் பேசுறாரு. நல்லது நடக்கும்னு நம்புவோம்.
ஆனா சில பல வருஷங்கள் கழிச்சு Mr. Mark ஏதும் Case போட்டு original post அ கண்டுபிடிச்சு மத்தவங்கள உள்ள போட்றபோறாரு.
March 21, 2017

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக