பச்சை நரம்பு


மனித மனம், சக மனிதன் மீது தான் செலுத்தக்கூடிய அதிகபட்ச துஷ்பிரயோகத்துக்கு எத்தனை தூரம் பழகிப்போயிருக்கின்றது என்பதை யோசித்துப் பார்த்தால் சற்று அதிர்ச்சியாகத் தான் இருக்கின்றது. நியாயம், மனிதாபிமானம் என்பவற்றைக் கடந்து செல்லுதல் தான் பெரும்பாலான மனிதர்களுக்கு எத்தனை எளிதாக இருக்கின்றது?

அனோஜன் பாலகிருஷ்ணனின் "பச்சை நரம்பு" தொகுதியில் பத்து சிறுகதைகள் இருக்கின்றன. அனைத்துமே மனித மனம் வெளிப்படுத்த தயங்கும் அந்தரங்கங்கள், அவை சார்ந்த உணர்வுகள் மற்றும் அவற்றின் மோசமான விளைவுகள் பற்றியவை. ஒரு சாராரின் அலட்சியமான குரூரங்கள் மறு சாராரின் நெடுங்காலக்காயங்களாக மாறுவதன் சாட்சிகள் இவை.

பெரும்பாலான கதைகளில் தன் பதின்மத்தின் இறுதியில் இருக்கும் ஒரு இளைஞன் இருக்கின்றான். அவன் எதிர்கொள்ள நேர்கின்ற பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் அவை சார்ந்து அவனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்கள் என்பவையே கருப்பொருளாக இருக்கின்றன. ஆண் குழந்தை மீதான பாலியல் துஷ்பிரயோகம் என்பது அதிகம் பேசப்படாத ஒரு விஷயம்.

உலகம் முழுவதும் போர் என்றாலே கொலை, குருதி, வன்முறை, உறவுகளை இழத்தல், அகதியாதல், கண்ணீர் என்பவை தான் அடையாளமாக இருக்கும். இதனால் போர் சார்ந்த புனைவுகளிலும் பெரும்பாலும் இவையே கருப்பொருளாக இருக்கும். ஆனால் இந்தத் தொகுப்பில் இலங்கையின் இனப்பிரச்சினையின் பெயரால், சார்ந்தோராலும் சாராதோராலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எத்தனை துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றன என்பதைச் சொல்லும் சில கதைகள் வெளி உலகத்திற்கு அதிகம் தெரியாத விடயங்களை உள்ளடக்கி இருக்கின்றன.

ஆனால் கதாசிரியருக்கு மொழிப் பரிச்சயம் இல்லையென்றால் அல்லது உறுதியாகத் தெரியாது என்றால் கதைக்குள் ஒரு சிங்களவன் சிங்களம் பேசுவதாக இடம்பெறும் உரையாடலை தமிழிலேயே எழுதி விடலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக